/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'அக்னி வீர்' திட்டத்தில் ஆள் சேர்ப்பு முகாம்
/
'அக்னி வீர்' திட்டத்தில் ஆள் சேர்ப்பு முகாம்
ADDED : டிச 12, 2024 11:30 PM
திருவள்ளூர்,:இந்திய ராணுவத்தில், 'அக்னி வீர்' திட்டத்தில் ஆள் சேர்ப்பு முகாம் காஞ்சிபுரத்தில் நடக்கிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இந்திய ராணுவத்தில், 'அக்னி வீர்' திட்டத்தின்கீழ் வீரர், நர்சிங் உதவியாளர் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு முகாம் காஞ்சிபுரம் அண்ணா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் ஜன. 21- - 31 வரை நடக்கிறது.
இதற்கு முன், பல்வேறு இடங்களில், 'அக்னி வீர்' திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட ஆள்சேர்ப்பு முகாம்களில் விண்ணப்பதாரர்கள் ராணுவத்தில் சேர்வதற்கு உடற்தகுதி தேர்வில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதே சமயம், விண்ணப்பதாரர்களின் ஆவணங்களை சரி பார்ப்பதும் ஆள்சேர்ப்பு செயல்முறைகளில் ஒரு முக்கிய அம்சம். விண்ணப்பதாரர்கள் ஆள்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பினில் உள்ள ஆவணங்கள் தொடர்பான அறிவுறுத்தல்களை சரிவர கடைப்பிடிக்காத காரணத்தினால், முகாம்களில் அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன என தெரிய வருகிறது.
இதைத் தவிர்க்கும் பொருட்டு, விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களை முறையாக அறிந்து அதற்கு ஏற்றார்போல, முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

