தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ வாகனங்களில் சிவப்பு, நீல விளக்குகள் விதிமீறுவோருக்கு கடிவாளம் அவசியம்

 வாகனங்களில் சிவப்பு, நீல விளக்குகள் விதிமீறுவோருக்கு கடிவாளம் அவசியம்

 வாகனங்களில் சிவப்பு, நீல விளக்குகள் விதிமீறுவோருக்கு கடிவாளம் அவசியம்


ADDED : நவ 29, 2025 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 03:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாலங்காடு: தனியார் வாகனங்களில் சிவப்பு, நீலம் வண்ணங்களில் ஒளிரும் விளக்குகளை பொருத்துவது அதிகரித்துள்ளது. போலீசார் மற்றும் ஆர்.டி.ஓ.,க்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி உள்ளிட்ட நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளன.

மாவட்டத்தில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் என, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன.

தற்போது போலீஸ் வாகனங்கள், ஆம்புலன்ஸ், அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்கள் வருவதை பிற வாகன ஓட்டிகள் கண்டறியும் வகையில், அரசு வாகனங்களில் சிவப்பு, நீலம் வண்ணங்களில் விளக்குகள் பொருத்தப்படுகின்றன.

முக்கிய அரசியல் தலைவர்கள் வருகையின் போதும், சைரன் விளக்கு பயன்படுத்தப்படுகிறது.

சமீபகாலமாக சில கார்கள், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்களில், இது போன்ற சிவப்பு,- நீல வண்ண விளக்குகள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

கடைகளில் விற்கப்படும் இதுபோன்ற சைரன் விளக்குகள் அனைத்தும், எல்.இ.டி., விளக்குகள். இரவு நேரங்களில் சிவப்பு, நீலம் என மாறி மாறி ஒளிரும் இந்த விளக்குகள், எதிர்திசையில் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை பாதிப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதை தடுக்க வேண்டிய போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வழக்கு பதிய வேண்டும் போலீசார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் அலட்சியத்தால், பல்வேறு தனியார் வாகனங்களில், சிவப்பு, நீல நிற எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இந்த வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். போக்குவரத்து விழிப்புணர்வு முகாம்களிலும், இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த விளக்குகளை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். - கே.ஜீவானந்தம், திருவாலங்காடு.

எப்.சி.,க்கு சரியாக வருகின்றன எப்.சி.,க்கு வரும் வாகனங்கள் சரியான முறையில் கொண்டு வரப்படுகின்றன. அதன்பின், விளக்குகள் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். வாகன சோதனையின் போது, இதுபோன்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதை, வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்க வேண்டும். - வட்டார போக்குவரத்து அலுவலர், திருவள்ளூர் மாவட்டம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us