வளர்ச்சி பணிகள் தேர்வு செய்வது குறித்து வட்டார பயிற்சி முகாம்
வளர்ச்சி பணிகள் தேர்வு செய்வது குறித்து வட்டார பயிற்சி முகாம்
UPDATED : அக் 07, 2026 05:15 AM
ADDED : அக் 06, 2026 06:46 PM
திருத்தணி: ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் தேர்வு செய்வது குறித்து, பணி மேற்பார்வையாளர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு, நேற்று பயிற்சி முகாம் நடந்தது.
திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளிலும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகளை தேர்வு செய்வது குறித்தான பயிற்சி முகாம், ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வட்டார அளவில் நடந்த இந்த பயிற்சி முகாமை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மணிசேகர், செல்வி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து, மாவட்ட பயிற்று அலுவலர் அருணா பேசியதாவது:
ஊராட்சிகளில், எந்த பணிகளுக்கு முன்னுரிமை அளித்து, கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
வரும் ஆண்டிற்குள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, நாளை முதல் வரும் 17ம் தேதிக்குள், ஊராட்சிகளில் தேர்வு குழுவினர் சென்று ஆய்வு செய்து, பணிகளை தேர்வு செய்து ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், தேர்வு குழுவினர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள், தன்னார்வலர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் பங்கேற்றனர்.
