/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
திருத்தணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : மார் 20, 2025 02:47 AM

திருத்தணி:திருத்தணி ம.பொ.சி.சாலை, சுந்தர விநாயகர் கோவில் எதிரே, 4,000 சதுரடி நிலம் உள்ளது. இந்த நிலம் திருத்தணி முருகன் கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது. இந்த நிலத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தனிநபர் ஒருவருக்கு கோவில் நிர்வாகம் தரை வாடகைக்கு விட்டது.
ஒரு மாதத்திற்கு, 55,000 ரூபாயை, கோவில் நிர்வாகத்திற்கு வாடகை தொகையாக கட்ட வேண்டும் என, ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலத்திற்கு செல்லும் வழியில் மாநில நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பழக்கடைகள், துணிக்கடை மற்றும் பெட்டிக்கடை என, 10க்கும் மேற்பட்ட கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.
கோவில் நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் பலமுறை எச்சரித்தும், கடைகள் அகற்றாமல் மெத்தனம் காட்டி வந்தனர். இதையடுத்து, திருத்தணி கோவில் நிர்வாகம், வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் இணைந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகள் அகற்றப்பட்டன.
இதனால், ஆக்கிரமிப்பாளர்கள் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், கோவில் நிலத்திற்கு செல்வதற்கு வழி ஏற்படுத்தப்பட்டது.