/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீரமைத்த கால்வாய் மீண்டும் ஆக்கிரமிப்பு
/
சீரமைத்த கால்வாய் மீண்டும் ஆக்கிரமிப்பு
ADDED : டிச 28, 2024 01:45 AM

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையில் இருந்து அத்திமாஞ்சேரிபேட்டை செல்லும் சாலையில், அகத்தீஸ்வரர் கோவில் அருகே கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. கழிவுநீர் கால்வாய் துார்ந்து கிடந்ததால், கழிவுநீர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலையில் பாய்ந்து வந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். நாளடைவில், சாலையும் சேதம் அடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக சமீபத்தில் இந்த பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. துார்ந்து கிடந்த கழிவுநீர் கால்வாய் புதிதாக கட்டப்பட்டது.
கால்வாய் கட்டப்பட்ட ஈரம் காயும் முன்பாகவே, அந்த கால்வாய் மீது ஆக்கிரமிப்புகள் மீண்டும் துவங்கியுள்ளன. இதை தடுத்து நிறுத்தாவிட்டால் மீண்டும் கழிவுநீர் கால்வாய் துார்ந்துபோகும் நிலை ஏற்படலாம் என பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

