/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலங்கள் வரத்து கால்வாய் பள்ளிப்பட்டில் சீரமைப்பு
/
பாலங்கள் வரத்து கால்வாய் பள்ளிப்பட்டில் சீரமைப்பு
ADDED : ஆக 13, 2025 02:37 AM

பள்ளிப்பட்டு: மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நெடுஞ்சாலை துறையினர் சாலையின் குறுக்கே உள்ள பாலங்களில் வெள்ளநீர் எளிதாக வழிந்தோடும் விதமாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளிப்பட்டு கோட்டத்திற்கு உட்பட்ட நெடுஞ்சாலையில், கடந்த ஓராண்டு காலமாக புதிய வேகத்தடைகள் மற்றும் மைய தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், நெடுஞ்சாலை துறைக்கு உரியஇடங்கள் கண்டறியப்பட்டு, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு, அந்த இடங்களில் மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், வரும் மழைக்காலத்தை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சாலையின் குறுக்கே உள்ள பாலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலங்களை ஒட்டிய கால்வாய்கள் துார்வாரப்பட்டு வருகிறது.
பாலத்தின் அகலம், பாய்ந்து செல்லும் வெள்ளத்தின் அளவு குறித்த விவரங்களும் அந்தந்த பாலங்களில் எழுதப்பட்டு வருகிறது. இதனால், பெருவெள்ளம் வந்தாலும், பாலம் குறித்த விவரத்தை அறிந்து வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக பாலங்களை கடந்து செல்ல முடியும்.

