/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி கட்டடங்கள் பாலாபுரத்தில் சீரமைப்பு
/
அரசு பள்ளி கட்டடங்கள் பாலாபுரத்தில் சீரமைப்பு
ADDED : ஜன 01, 2024 06:22 AM

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம், பாலாபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 300 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளியின் வட மேற்கு பகுதியில் உள்ள வகுப்பறை கட்டடம் பழுதடைந்திருந்தது. தற்போதைய அரையாண்டு விடுமுறையில் இந்த வகுப்பறை கட்டடங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. தரைதளத்தில், பதிகற்கள் பதிக்கப்படுகிறது. மேல்தளத்தில் ஏற்பட்டிருந்த பழுதுகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இதே போல், ஸ்ரீகாளிகாபுரம் அரசு மேல்நிலை பள்ளியிலும் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கழிப்பறை உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கட்டடங்கள் சீரமைக்கப்படுவதால், புத்தாண்டில், மாணவர்களுக்கு கூடுதல் இடவசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.