/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் சீரமைப்பு
/
திருவள்ளூர் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் சீரமைப்பு
திருவள்ளூர் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் சீரமைப்பு
திருவள்ளூர் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடம் சீரமைப்பு
ADDED : நவ 15, 2024 01:41 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் நகராட்சி வாகன நிறுத்துமிடம் சீரமைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தோர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில்களில் பயணம் செய்து வருகின்றன.
இருசக்கர வாகனங்களில் வருவோர், அவர்களது வாகனங்களை நிறுத்துவதற்கு ரயில் நிலைய வளாகம் மற்றும் அருகில் பல தனியார் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.
திருவள்ளூர் நகராட்சி சார்பிலும், ஒரு வாகன நிறுத்துமிடம் செயல்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வாடகைக்கு விடப்படுகிறது.
இந்த வாகன நிறுத்தும் இடம் பாழடைந்துள்ளதால், மழைநீர் உள்ளே புகுந்து விடுவதால் வாகனங்கள் சேதமடைந்து வந்தன.
இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில், இந்த வாகன நிறுத்துமிடம் சீரமைக்கப்பட்டு, புதிதாக இரும்பு தகடுகளால் ஆன கூரை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வாகன நிறுத்துமிடம் தனியாருக்கு ஏலம் விடப்பட்ட நிலையில், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.