/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புட்லுார் - அரண்வாயல் சாலையில் ரூ.3.75 கோடியில் சீரமைப்பு பணி
/
புட்லுார் - அரண்வாயல் சாலையில் ரூ.3.75 கோடியில் சீரமைப்பு பணி
புட்லுார் - அரண்வாயல் சாலையில் ரூ.3.75 கோடியில் சீரமைப்பு பணி
புட்லுார் - அரண்வாயல் சாலையில் ரூ.3.75 கோடியில் சீரமைப்பு பணி
ADDED : ஜன 28, 2025 07:59 PM
திருவள்ளூர்:புட்லுார் - அரண்வாயல் சாலையில், 3.75 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைப்பு பணி பூமி பூஜையுடன் துவங்கியது.
பூந்தமல்லி - திருவள்ளூர் சாலையில், அரண்வாயல் கிராமம் உள்ளது. இங்கிருந்து, புட்லுார் வழியாக, திருவள்ளூர் - -ஆவடி சாலையை இணைக்கும் வகையில், 6 கி.மீ., துாரத்தில் சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக, தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
புட்லுார் ரயில் நிலையம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், காக்களூர் தொழிற்பேட்டைக்கு, பக்தர்கள், தொழிலாளர்கள் என, 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
அரண்வாயலில் இருந்து, புட்லுார் வரை, 4 கி.மீ., துாரம் சாலையில் தார் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக, இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இச்சாலையை சீரமைக்கக்கோரி பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, புட்லுார் மேம்பாலத்தில் இருந்து, அரண்வாயல் மேம்பாலம் வரை 4 கி.மீ., துாரம் வரை, 3.75 கோடி ரூபாய் நெடுஞ்சாலைத் துறை நிதி ஒதுக்கீடு செய்தது. சாலை சீரமைப்பு பணியினை, பூந்தமல்லி தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி நேற்று, சாலை சீரமைப்பு பணியை, பூமி பூஜையுடன் துவக்கி வைத்தார்.

