/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பா.ஜ., சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை கேட்பு பெட்டி
/
பா.ஜ., சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை கேட்பு பெட்டி
பா.ஜ., சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை கேட்பு பெட்டி
பா.ஜ., சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கை கேட்பு பெட்டி
ADDED : மார் 21, 2024 12:09 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில், நலத்திட்டங்களின் வளர்ச்சிக்கான மனுக்கள் பெற ஒன்றியம் வாரியாக, பா.ஜ., சார்பில் கோரிக்கை பெட்டி வைக்கப்படுகிறது.
அதன்படி, திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட திருவாலங்காடில், ஒன்றிய பா.ஜ., சார்பில் கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டது.
தொகுதி மக்களின் தேவைகள், வளர்ச்சி குறித்து மனுக்கள் பெற்று தீர்வு காணப்பட உள்ளது. அதன்படி, நேற்று திருவாலங்காடு, தேரடி பேருந்து நிறுத்தத்தில் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், ஒன்றிய தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் கோரிக்கை பெட்டியை வைத்து, பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.
அப்போது, மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.