/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெதுார் சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டிய கோரிக்கை
/
மெதுார் சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டிய கோரிக்கை
மெதுார் சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டிய கோரிக்கை
மெதுார் சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் வேண்டிய கோரிக்கை
ADDED : நவ 22, 2024 01:00 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும், 250 - 300 புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மாதத்திற்கு, 400க்கும் அதிகமான கர்ப்பிணியர் சிகிச்சை மற்றும் ஆலோசனை பெறுகின்றனர். கர்ப்பிணியர் மகப்பேறுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள், அவர்களுடைய உதவியாளர்கள், புறநோயாளிகள், அவசர சிகிச்சைக்கு வருபவர்கள் என, ஆரம்ப சுகாதார நிலையம் எப்போதும் நெரிசலுடன் இருக்கிறது.
இங்கு மகப்பேறு பெரும் பெண்கள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். பல்வேறு வசதிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைகள் கிடைப்பதால், சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
அதே சமயம் சுகாதார நிலையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் இருக்கிறது. கட்டடத்தின் பின்புற பகுதியில் மழைநீர் தேங்கி இருக்கிறது. அதில் இருந்து விஷ ஜந்துக்கள் அவ்வப்போது வளாகத்திற்கு வந்து செல்வதால், பணியில் உள்ள மருத்துவ குழுவினர் மற்றும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அச்சம் அடைகின்றனர்.
மேலும், கட்டடத்தின் முகப்பு பகுதியில் கூரை இல்லாததால், மழைக்காலங்களில் சாரல் சுகாதார நிலையத்தின் உள்பகுதிக்கு வருகிறது.
அச்சமயங்களில் அங்குள்ளவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாவட்ட நிர்வாகம், சுகாதார நிலைய கட்டடத்தை சுற்றிலும் சுற்று சுவர் அமைக்கவும், முகப்பு பகுதியில் கூரை அமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.