ADDED : ஏப் 29, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் உள்ள தாமரைக்குளம். இந்த குளத்து நீரை குடிநீராக பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்தனர். சுற்றியுள்ள வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் சேகரமாகி வருகிறது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது.
மேலும், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளது. இந்த குளத்தை துார் வாரி நீரை சேமித்தால், சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். எனவே, தாமரைக்குளத்தை துார்வார வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

