/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை
/
கழிவுநீர் கால்வாய் சீரமைக்க கோரிக்கை
ADDED : நவ 23, 2024 01:43 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் ஓரத்துார் ஊராட்சியில், பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மேலும் அதே சாலையில் அரசு பள்ளி, வி.ஏ.ஓ., அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இங்கு பல ஆண்டுகளுக்கு முன் சாலையோரத்தில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் முறையான பராமரிப்பு இல்லாததால், துார்ந்துள்ளன.
மேலும், வீடுகளில் பயன்படுத்தப்படும் பாலித்தீன் கவர், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை காற்றில் அடித்துச்செல்லப்பட்டு கால்வாயில் விழுகிறது. தற்போது கழிவுநீர் கால்வாயில், செடிகள் முளைத்து, மணல், ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன.
இதனால் மழைக்காலத்தில் கழிவுநீர் செல்ல வழியின்றி ஒரே இடத்தில் தேங்கி நிற்கும், இதனால் இப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
அரசு சார்பில் பல லட்ச ரூபாய் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்ட நிலையில், முறையாக பராமரிக்காததால், துார்ந்து போகும் அபாய நிலை உள்ளது.
எனவே கழிவுநீர் கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.