/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புட்லூர் கோவில் குளத்தில் கரை அமைக்க கோரிக்கை
/
புட்லூர் கோவில் குளத்தில் கரை அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 19, 2025 09:58 PM
புட்லுார்:புட்லுார் எட்டியம்மன் கோவில் குளத்தில், மூன்று பக்கம் கரை அமைக்கப்பட்டு, ஒருபுறம் மட்டும் கரை அமைக்கப்படாமல் உள்ளது.
திருவள்ளூர் ஒன்றியம் புட்லுார் கிராமவாசிகள் சார்பில் செந்தில்குமார் என்பவர், வருவாய் துறை செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் வட்டம் புட்லுார் ஊராட்சியில், சர்வே எண்: 343ல் எட்டியம்மன் கோவில் குளம் அமைந்துள்ளது. இந்த கோவில் குளத்தில், கடந்த 2021 - 22ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 16.47 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, குளத்தின் மூன்று கரை மட்டும் அமைக்கப்பட்டது. ஒரு பகுதி கரை மட்டும் சீரமைக்காமல், அரசு பணம் விரயமாகி உள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் தாசில்தார் மற்றும் ஊராட்சிக்கு பலமுறை மனு அளித்தும், தற்போது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு முறையும் குளத்தை சீரமைக்கும் போதும், ஒரு பகுதி கரை மட்டும் ஆக்கிரமிப்பு காரணமாக சீரமைக்கப்படுவதில்லை என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே, எட்டியம்மன் கோவில் குளத்தில் உள்ள மற்றொரு கரையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

