/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணவூர் ரயில் நிலையத்தில் கழிப்பறை அமைக்க கோரிக்கை
/
மணவூர் ரயில் நிலையத்தில் கழிப்பறை அமைக்க கோரிக்கை
மணவூர் ரயில் நிலையத்தில் கழிப்பறை அமைக்க கோரிக்கை
மணவூர் ரயில் நிலையத்தில் கழிப்பறை அமைக்க கோரிக்கை
ADDED : டிச 23, 2025 01:23 AM
திருவாலங்காடு: மணவூர் ரயில் நிலையத்தில் கழிப்பறை வசதியில்லாததால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அருகே மணவூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, தினமும் 160 புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்கின்றன. தினமும் சராசரியாக, 30,000 பயணியர், இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
நான்கு நடைமேடைகள் உள்ள நிலையில், அவற்றில் ஒன்றில் கூட கழிப்பறை வசதி இல்லை. இதனால், ரயிலுக்கு வரும் பெண் பயணியர் இயற்கை உபாதையை கழிக்க இடமின்றி, பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர்.
ஆண்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், ரயில் நிலைய பகுதி அசுத்தம் ஏற்படுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து, மணவூர் ரயில் நிலையத்தில் பயணியர் வசதிக்காக கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.

