/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்கன்வாடி கட்டட பணி விரைந்து முடிக்க கோரிக்கை
/
அங்கன்வாடி கட்டட பணி விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : ஏப் 18, 2025 02:25 AM

ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம் பேரிட்டிவாக்கம் ஊராட்சியில், கடந்த 1990ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வந்தது. இதில், 20 சிறுவர் - சிறுமியர் பயின்று வந்தனர். அதன்பின், கட்டடம் சிதிலமடைந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் தனியார் இடத்தில் இயங்கி வந்தது.
கடந்தாண்டு புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட, 13.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. ஆறு மாத காலத்தில் கட்டப்பட வேண்டிய கட்டடம், தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
பூண்டி ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி மைய கட்டட பணியை விரைவுபடுத்த வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

