/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளத்தின் சுற்றுச்சுவர் முடிக்க கோரிக்கை
/
குளத்தின் சுற்றுச்சுவர் முடிக்க கோரிக்கை
ADDED : செப் 29, 2024 01:12 AM

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த, அரியதுறை கிராமத்தில், மரகதவல்லி சமேத வரமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது.
ஹிந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வரமூர்த்தீஸ்வரர் கோவில், காசிக்கு நிகராக போற்றி வணங்கப்படுகிறது. வரமூர்த்தீஸ்வரர் கோவிலில், கடந்த ஆகஸ்ட் மாதம், 23ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்திற்கு முன்பாக கோவில் முன் பரந்து காணப்படும் குளத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் எழுப்ப, 23 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கடந்த ஜூன் மாதத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சுற்றுச்சுவருக்கான துாண்கள் எழுப்பியதுடன் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. மேலும், தாமதிக்காமல், விடுபட்ட சுற்றுச்சுவர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.