/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ராமச்சந்திராபுரம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
/
ராமச்சந்திராபுரம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ராமச்சந்திராபுரம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ராமச்சந்திராபுரம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 12, 2025 01:00 AM

பள்ளிப்பட்டு:புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமச்சந்திராபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பழுதடைந்த வகுப்பறை கட்டடத்திற்கு மாற்றாக, அதற்கு எதிரில் புதிய கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
புதிய கட்டட வளாகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பள்ளி நேரத்திலும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் உள்ளே நுழையும் நிலை உள்ளது. எனவே, இந்த புதிய வளாகத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும் என, மாணவ - மாணவியரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.