ADDED : ஜன 31, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை: அய்யனார் நகரில் கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அய்யனார் நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இங்கு, கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீரை செப்டிக் டேங்கில் விடுகின்றனர். இரண்டு மாதங்களில் தொட்டி நிறைந்து விடுகிறது. இதனால், பணம் கொடுத்து அதை வெளியேற்றும் நிலை ஏற்படுகிறது.
எனவே, அய்யனார் நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
