ADDED : ஜூன் 07, 2026 03:40 AM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக்காட்டூர், சின்னகளக்காட்டூர், ஜே.எஸ்.ராமாபுரம் ஆகிய மூன்று கிராமங்களில், 8,000த்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதியை சேர்ந்த மக்கள், தங்கள் இல்ல குடும்ப விழாக்களை நடத்தம் சின்னம்மாபேட்டை, தக்கோலம் பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களை நாட வேண்டிய நிலை உள்ளது.
எனவே, மக்களின் நிதிச்சுமையை குறைக்கவும், வீண் அலைச்சலை தவிர்க்கவும், பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் சமுதாய கூடம் அமைக்க, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
