தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ சாலையோரங்களில் நெல் குவிப்பு :நெற்களங்கள் அமைக்க கோரிக்கை

 சாலையோரங்களில் நெல் குவிப்பு :நெற்களங்கள் அமைக்க கோரிக்கை

 சாலையோரங்களில் நெல் குவிப்பு :நெற்களங்கள் அமைக்க கோரிக்கை


ADDED : ஜன 26, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொன்னேரி: பொன்னேரி பகுதியில் போதிய நெற்களங்கள் இல்லாததால், அறுவடை செய்த நெல்லை சாலையோரங்களில் குவித்து வைக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். நெற்களங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சம்பா அறுவடை பணிகள் தற்போது நடைபெறுகிறது. அறுவடையின் போது, எதிர்பார்த்த மகசூல் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

தற்போது, போதிய நெற்களங்களும் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். நெல்லை உலர வைப்பதற்காகவும், விற்பனை செய்வதற்காகவும் சாலையோரங்களில் குவியல் குவியலாக வைத்துள்ளனர்.

இதனால், சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.

எனவே, மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும், போதியளவில் நெற்களங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us