/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாலத்தில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
/
பாலத்தில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : நவ 01, 2025 09:47 PM
கும்மிடிப்பூண்டி: பெத்திக்குப்பம் ரயில்வே மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. கும்மிடிப்பூண்டி நகரை இணைக்கும் முக்கிய மேம்பாலமாகும். அந்த மேம்பாலத்தில், இருந்த எல்.இ.டி., மின் விளக்குகள், இரு ஆண்டுகளுக்கு முன் பழுதானது. பலவீனமாக இருந்த மின் கம்பங்கள் சில, மிக்ஜாம் புயலில் முறிந்து விழுந்தன. எஞ்சிய மின் கம்பங்களும், எந்த நேரத்திலும் விழக்கூடும் என்ற நிலையில் உள்ளன.
இதனால் அந்த மேம்பாலத்தில், மின் விளக்கு வசதியின்றி இரவு நேரத்தில் இருளில் மூழ்குகிறது. இரவு நேரத்தில் அந்த மேம்பாலத்தை கடக்கும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சிரமத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
புதிய மின் கம்பங்களும், மின் விளக்குகளும் அமைக்க பெத்திக்குப்பம் ஊராட்சி நிர்வாகம் வாயிலாக கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

