/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அனல் மின் நிலைய சாலையில் மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை
/
அனல் மின் நிலைய சாலையில் மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை
அனல் மின் நிலைய சாலையில் மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை
அனல் மின் நிலைய சாலையில் மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை
ADDED : பிப் 03, 2025 02:19 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த, அத்திப்பட்டு புதுநகரில், வடசென்னை அனல் மின்நிலையம் ஒன்று, இரண்டு மற்றும் வடசென்னை - 3, எரிவாயு முனையங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள், துறைமுகங்கள் அமைந்து உள்ளன.
மேற்கண்ட நிறுவனங்களில், சென்னை எண்ணுார், கத்திவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்கள், எண்ணுார் - வடசென்னை அனல் மின்நிலைய சாலை வழியாக பயணிக்கின்றனர். இந்த சாலையில், மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சமூக விரோதிகள், இருட்டான பகுதிகளில் நின்று, பணிக்கு சென்று வரும் தொழிலாளர்களை வழிமடக்கி சிறு சிறுவழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
இதனால், தொழிலாளர்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டி உள்ளது. மூன்று அனல் மின் நிலையங்களில் அடுத்தடுத்து இந்த சாலையில் அமைந்திருந்தும், சாலையோரங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் இருப்பது வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தொழில் நிறுவனங்களில், சமூக பங்களிப்பின் வாயிலாக, இந்த சாலையில் மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

