தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை

உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை

உயர்கோபுர மின்விளக்கு அமைக்க கோரிக்கை


ADDED : மார் 29, 2025 07:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 07:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் சாலையில் மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இருந்து, மாவட்ட தலைநகரான திருவள்ளூர் செல்ல, இச்சாலை வழியாக தினமும் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

இங்குள்ள ஆரணி ஆற்றில், 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் மீது செல்லும் வாகனங்கள், மின்வாரிய அலுவலக சந்திப்பு வழியே, ஊத்துக்கோட்டைபேரூராட்சிக்குள் நுழைகின்றன.

இந்த சந்திப்பில் இரவு நேரத்தில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாததால், வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. கும்மிருட்டான இந்த இடத்தில் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை பேரூராட்சி, மின்வாரிய அலுவலக சந்திப்பில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us