தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ புறவழிச்சாலை பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

 புறவழிச்சாலை பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க கோரிக்கை

 புறவழிச்சாலை பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைக்க கோரிக்கை


ADDED : பிப் 22, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், ரயில் நிலையம் மற்றும் பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பில், நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி நகருக்குள் வந்து செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கையை விட, புறவழிச்சாலை அமைந்துள்ள, சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகம்.

சென்னை மற்றும் ஆந்திர மாநிலம் ஆகிய இரு மார்க்கங்களில், தமிழகம் மற்றும் ஆந்திர மாநில அரசு மற்றும் தனியார் என, தினமும் நுாற்றுக்கணக்கான பேருந்துகள், கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலை வழியாக இயக்கப்படுகின்றன.

இதனால், புறவழிச்சாலையின் இணைப்பு சாலையில், ரயில் நிலையம் மற்றும் பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பில், 24 மணி நேரமும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் அதிகளவில் குவிந்திருப்பர்.

இந்த இரு நிறுத்தங்களிலும், பயணியர் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால், மழை, வெயிலில் காய்ந்து, பயணியர் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.

எனவே, கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், ரயில் நிலையம் மற்றும் பாலகிருஷ்ணாபுரம் ஆகிய இரு பேருந்து நிறுத்தங்களில், நிழற்குடைகள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us