sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பேரிடர் பல்நோக்கு கட்டட வளாகம் பராமரிக்க கோரிக்கை

/

பேரிடர் பல்நோக்கு கட்டட வளாகம் பராமரிக்க கோரிக்கை

பேரிடர் பல்நோக்கு கட்டட வளாகம் பராமரிக்க கோரிக்கை

பேரிடர் பல்நோக்கு கட்டட வளாகம் பராமரிக்க கோரிக்கை


ADDED : நவ 26, 2024 06:37 AM

Google News

ADDED : நவ 26, 2024 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி,: பேரிடர் பல்நோக்கு கட்டட வளாகத்தை பராமரிக்க வேண்டு மென கோரிக்கைஎழுந்துள்ளது.

பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்கும் நோக்கில் கடலோர பகுதிகளில், பல்நோக்கு பாதுகாப்பு மையகட்டடங்கள் நிறுவப்பட்டன.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே தலையாரிபாளையம் கிராமத்தில், அரசினர் மேல்நிலைபள்ளி அருகே,2017ம் ஆண்டுபல்நோக்கு பாதுகாப்பு மைய கட்டடம்நிறுவப்பட்டது.

ஒவ்வொருஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில், புயல் மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்படும் போது, நுாற்றுக்கணக்கான மக்களை அங்கு தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில்,அடுத்தடுத்து மழை மற்றும் புயல் காலம் வர இருப்பதால், தலையாரிபாளையம் கிராமத்தில் உள்ள பல்நோக்கு கட்டடம் பயன்பாட்டிற்கு வரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், முறையான பராமரிப்பின்றி, அந்த பல்நோக்கு கட்டட வளாகம் முழுதும் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது.

உடனடியாக கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம், பல்நோக்கு கட்டடத்தில்பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு தயார் நிலையில் வைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us