/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிவன் கோவில் குளம் பராமரிக்க கோரிக்கை
/
சிவன் கோவில் குளம் பராமரிக்க கோரிக்கை
ADDED : ஜூலை 10, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:ஏ.என்.குப்பம் கிராமத்தில் உள்ள சிவன் கோவில் குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவரைப்பேட்டை அடுத்த ஏ.என்.குப்பம் கிராமத்தில் சிதிலமடைந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது. கோவில் முகப்பில் பரந்து விரிந்து காணப்படும் கோவில் குளம் உள்ளது. அந்த குளம் ஏ.என்.குப்பம் கிராமத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கிறது.
ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க தவறியதால், குளத்தை சுற்றி செடிகள் மண்டி கிடக்கின்றன.
மழைக்காலத்திற்கு முன்பாக அந்த குளத்தை சுற்றியுள்ள செடிகளை அகற்றி, துார் எடுத்து முறையாக பராமரிக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

