/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குமரஞ்சேரி முருகன் கோவிலுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
/
குமரஞ்சேரி முருகன் கோவிலுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
குமரஞ்சேரி முருகன் கோவிலுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
குமரஞ்சேரி முருகன் கோவிலுக்கு கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
ADDED : டிச 27, 2025 06:03 AM
பொன்னேரி: குமரஞ்சேரி முத்துகுமாரசுவாமி கோவிலுக்கு, கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொன்னேரி அடுத்த குமரஞ்சேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துகுமாரசுவாமி கோவில் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமைகளில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் முருக பெருமானை தரிசிக்க வந்து செல்கின்றனர்.
இந்த கோவில் உள்ள வழித்தடத்தில், அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம், ஒரேயொரு பேருந்து இயக்கப்படுகிறது.
இதனால், கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒவ்வொரு வாரமும், பக்தர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது.
எனவே, செவ்வாய்க்கிழமைகளில் பொன்னேரியில் இருந்து குமரஞ்சேரிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க, பணிமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.