/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தேவந்தவாக்கம் தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை
/
தேவந்தவாக்கம் தடத்தில் பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : ஆக 11, 2025 11:03 PM
திருவள்ளூர், திருவள்ளூரில் இருந்து தேவந்தவாக்கத்திற்கு மாலை நேரத்தில் பேருந்து இயக்கக் கோரி, கலெக்டருக்கு கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.
கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு:
தேவந்தவாக்கம் மற்றும் சோமதேவன்பட்டு ஆகிய இரண்டு கிராமங்களில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். எங்கள் பகுதியில் இருந்து சென்னை, ஸ்ரீபெரும்புதுாருக்கு, தினமும் ஏராளமானோர் வேலைக்கு சென்று வருகின்றனர்.
மேலும், கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் குழந்தைகள் திருவள்ளூர் மருத்துவமனை செல்ல வேண்டுமென்றால், மூன்று கி.மீ., நடந்து சென்று, மெய்யூரில் தான் பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் மாலையில் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு சென்றோர், வீடு திரும்ப பேருந்து வசதி இல்லாததால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் மெய்யூரில் இருந்து சில கி.மீ., நடந்து தேவந்தவாக்கம் வரை வருகின்றனர்.
மாலை நேரம் என்பதால் பெண்கள், குழந்தைகள், மற்றும் முதியோர் மற்றும் பணிக்கு செல்வோர், மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, திருவள்ளூரில் இருந்து மாலை நேரத்தில் தேவந்தவாக்கத்திற்கு பேருந்துகளை இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.