/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'கொரோனா' காலத்தில் நிறுத்திய இரவு நேர ரயில்களை இயக்க கோரிக்கை
/
'கொரோனா' காலத்தில் நிறுத்திய இரவு நேர ரயில்களை இயக்க கோரிக்கை
'கொரோனா' காலத்தில் நிறுத்திய இரவு நேர ரயில்களை இயக்க கோரிக்கை
'கொரோனா' காலத்தில் நிறுத்திய இரவு நேர ரயில்களை இயக்க கோரிக்கை
ADDED : ஜன 07, 2025 07:26 AM
பொன்னேரி : சென்னை சென்ட்ரல் -- கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் பயணியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், மீஞ்சூரில் தலைவர் தீனதயாளன் தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. சங்கத்தின் செயலர் தனுஷ்கோடி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
சென்னையில் இருந்து, கும்மிடிப்பூண்டிக்கு, இரவு 12:15 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து, சென்னைக்கு அதிகாலை 2:45 மணிக்கும் இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில்கள், 'கொரோனா' பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்டன.
பெருந்தொற்றில் இருந்து மீண்டு நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், மீண்டும் அவை இயக்கப்படாமல் இருக்கிறது.
இதனால், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், அதிகாலை நேரத்தில் வியாபாரத்திற்கு செல்பவர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். 'கொரோனா' தொற்று காலத்திற்கு முன் இயக்கப்பட்ட அனைத்து புறநகர் மின்சார ரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.
சென்னை கடற்கரையில் இருந்து, கும்மிப்பூண்டிக்கு, இரவு 10:45 மணிக்கு இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயில், கடந்த, 2ம் தேதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.
அதை மீண்டும் இயக்க வேண்டும். இது தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ., ஆகியோரின் வாயிலாக ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

