/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி மார்க்கத்தில் நிறுத்தப்பட்ட புறநகர் ரயில்களை இயக்க கோரிக்கை
/
கும்மிடி மார்க்கத்தில் நிறுத்தப்பட்ட புறநகர் ரயில்களை இயக்க கோரிக்கை
கும்மிடி மார்க்கத்தில் நிறுத்தப்பட்ட புறநகர் ரயில்களை இயக்க கோரிக்கை
கும்மிடி மார்க்கத்தில் நிறுத்தப்பட்ட புறநகர் ரயில்களை இயக்க கோரிக்கை
ADDED : பிப் 04, 2025 01:04 AM
மீஞ்சூர்,சென்னை -- கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், ஆயிரக்கணக்கான ரயில் பயணியர், கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்டவைகளுக்காக தினமும் புறநகர் ரயில்களில் பயணிக்கின்றனர். காலை, மாலை நேரங்களில் புறநகர் ரயில்களில் கூட்டம் அதிகமாகவும், நெரிசலுடன் இவர்கள் பயணிக்கும் நிலை உள்ளது.
தற்போது, இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் பெரும்பாலானவை ஒன்பது பெட்டிகள் கொண்டவையாக உள்ளன.
பயணியர் சிரமமின்றி பயணிக்க ஏதுவாக அனைத்து புறநகர் ரயில்களும், 12 பெட்டிகள் கொண்டதாக மாற்றம் செய்ய வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இது குறித்து சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்க ரயில் சங்க செயலர் டி. தனுஷ்கோடி கூறியதாவது:
அனைத்து புறநகர்களும், 12 பெட்டிகள் கொண்டதாக இருந்தால், மகளிருக்கு கூடுதல் பெட்டிகள் ஒதுக்கப்படும். அதன் வாயிலாக அவர்கள் சிரமம் இன்றி பயணிப்பர்.
அதிகாலை 2:40 மணிக்கு இயக்கப்பட்ட கும்மிடிப்பூண்டி - சென்னை சென்டரல், இரவு 12:15 மணிக்கு இயக்கப்பட்ட சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, இரவு 10:45 மணிக்கு இயக்கப்பட்ட, சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி ஆகிய ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால், காய்கறி, பழம், பூ., விவசாயிகள், பால் வியாபாரிகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், அரசு போக்குவரத்து ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
நிறுத்தப்பட்டவைகளும், காலை, மாலை நேரங்களில், கூடுதலாகவும் புறநகர் ரயில்களை இயக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

