/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் பேருந்து இயக்க வேண்டுகோள்
/
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் பேருந்து இயக்க வேண்டுகோள்
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் பேருந்து இயக்க வேண்டுகோள்
திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் பேருந்து இயக்க வேண்டுகோள்
ADDED : மே 03, 2025 11:08 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுாருக்கு தினமும் தொழிலாளர்கள் செல்லும் வகையில், பேருந்துகள் இயக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகளில், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ரயில் வாயிலாக வருகின்றனர்.
இவர்கள், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 1 கி.மீ., துாரம் நடந்து சென்று, மணவாளநகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் செல்கின்றனர். இதனால், அலைச்சல், காலவிரயம் ஏற்படுகிறது.
தற்போது, திருவள்ளூரில் இருந்து ஸ்ரீபெரும்புதுாருக்கு ஏராளமான மாநகர பேருந்துகள் மற்றும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், சில பேருந்துகளை காலை - மாலை நேரங்களில், திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுாருக்கு செல்லும் வகையில் இயக்க வேண்டும்.
ஏற்கனவே ரயில் நிலையம் அருகில், பெரியகுப்பம் பேருந்து நிலையத்தில் இருந்து தேரடி வரை பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையத்திலும் விசாலமான இடம் உள்ளது.
இங்கிருந்து பேருந்துகள் இயக்கினால், தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் பயனடைவதுடன், அரசு பேருந்துகளுக்கும் வருவாய் கூடுதலாக கிடைக்கும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.