/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாழடைந்த கல்வி அலுவலகம் அகற்ற கோரிக்கை
/
பாழடைந்த கல்வி அலுவலகம் அகற்ற கோரிக்கை
ADDED : ஜன 05, 2025 10:45 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில், துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி என, மொத்தம், 94 ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 250க்கும் மேற்பட்ட இருபால் ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
அந்த பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான, தலைமை அலுவலகமான, வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம், 50 ஆண்டுகளாக செயல்பட்ட நிலையில், கட்டடம் பழுதடைந்ததால், 10 ஆண்டுகளாக திருவாலங்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே உள்ள அரசு மாதிரி துவக்கப் பள்ளி வளாகத்தில் இயங்குகிறது.
இந்த பழைய வட்டார கல்வி அலுவலக கட்டடம், தற்போது சேதமடைந்து பலமிழந்து மரங்களின் வேர்கள் கட்டடத்திற்குள் புகுந்து சேதப்படுத்தியதால் கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
எனவே, இந்த பழுதடைந்த பழைய வட்டார கல்வி அலுவலக கட்டடத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.