/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
/
நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை
ADDED : நவ 24, 2024 08:24 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், ரயில் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள அந்த சாலையில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தை ஒட்டி, பாதசாரிகள் நடந்து செல்வதற்கான நடைபாதை உள்ளது.
அந்த நடைபாதையை, அங்குள்ள சில கடைகள் ஆக்கிரமித்துள்ளன. அந்த பாதையில், பழைய பொருட்கள், டூ -வீலர்கள், உணவகம் வைக்கப்பட்டுள்ளன. அத்தனை இடையூறுகளுக்கும் இடையே பாதசாரிகள் கடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
வேறு வழியின்றி விபத்து அச்சத்தில், சாலையில் நடந்து செல்ல வேண்டியுள்ளது என பாதசாரிகள் தெரிவிக்கின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதையை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.