/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோழவரம் குளத்தை சீரமைக்க கோரிக்கை
/
சோழவரம் குளத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 18, 2024 12:11 AM

சோழவரம்:சோழவரம் காவல் நிலையம் பின்புறம் கவரைக்குளம் அமைந்து உள்ளது. நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குளத்தின் அருகில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து ஊராட்சியின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், 15 லட்சம் ரூபாயில் இந்த குளத்தை சுற்றிலும், சுற்றுச்சுவர், நடைபாதை உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர் பராமரிப்பு இல்லாததால், தற்போது குளத்தை சுற்றிலும் கரைப்பகுதிகள் சேதம் அடைந்து உள்ளன.
நடைபயிற்சி செய்வதற்காக குளத்தை சுற்றிலும் போடப்பட்ட கான்கிரீட் கட்டுமானங்கள் சிதைந்து கிடக்கின்றன.
இதனால், காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முட்செடிகளும் சூழ்ந்து கிடக்கின்றன.
பராமரிப்பு இன்றி இருக்கும் குளத்தை சீரமைக்கவும், நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக போடப்பட்ட நடைபாதைகளை புதுப்பித்து, இருக்கை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், அங்கு ஏற்படுத்திட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.