/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாலி தீர்த்த குளம் சீரமைக்க கோரிக்கை
/
வாலி தீர்த்த குளம் சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 28, 2025 06:38 AM

கும்மிடிப்பூண்டி: பெருவாயல் கிராமத்தில் செடி, கொடிகள் படர்ந்து, துார்ந்து போன வாலி தீர்த்த குளத்தை துார் வாரி, பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் கிராமத்தில், ஹிந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சவுந்தரவல்லி சமேத திருவாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
கோவில் முன் பரந்து, விரிந்து காணப்படும் வாலி தீர்த்த குளம் உள்ளது. இக்குளத்தில், வாலி புனித நீராடி, அங்குள்ள சிவனை வழிபட்டதால், சிவனை திருவாலீஸ்வரர் என்றும், குளத்தை 'வாலி தீர்த்தம்' என்றும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது. இந்த குளம் அசுத்தமாகி, பெரும்பாலான பகுதிகள் துார்ந்து போய் செடி, கொடிகள் படர்ந்துள்ளன. ஆன்மிக அன்பர்களால் பெரிதும் போற்றப்படும் வாலி தீர்த்த குளம், தற்போது பரிதாபமான நிலையில் உள்ளது.
எனவே, குளத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

