/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கனகவல்லிபுரம் சாலையை சீரமைக்க கோரிக்கை
/
கனகவல்லிபுரம் சாலையை சீரமைக்க கோரிக்கை
ADDED : அக் 06, 2024 01:00 AM

பொன்னேரி, பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி கிராமத்தில் இருந்து கனகவல்லிபுரம், பள்ளம்பாக்கம் கிராமங்களுக்கு செல்லும், 1.5கி.மீ., ஒன்றிய சாலை சேதம் அடைந்து கிடக்கிறது.
சரளை கற்கள் பெயர்ந்தும், ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டும் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருக்கிறது. மேற்கண்ட இரு கிராமங்களிலும், 150க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
மேற்கண்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அத்யாவசிய தேவைகளுக்கு பொன்னேரி வந்து செல்ல இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். சாலை சேதம் அடைந்து கிடப்பதால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பேருந்து வசதி இல்லாத நிலையில், இருசக்கர வாகனங்களையே நம்பி உள்ளனர்.
சாலை கரடு முரடான நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் உடல்வலிகளுக்கும், சிறு சிறு விபத்துகளுக்கும் உள்ளாகின்றனர். மேற்கண்ட சாலையை, உங்கள் ஊரில் முதல்வன் திட்டத்தின் கீழ், 1.5 கி.மீ., தொலைவிற்கு புதுப்பிக்க, 1.16 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
சாலை சீரமைப்பு பணிகள் நடைபெறாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் கிராமவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
மேற்கண்ட சாலைக்கு, உரிய நிதி ஒதுக்கீடு செய்து, சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.