ADDED : நவ 14, 2025 01:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவில் 16 கால் மண்டபம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாலங்காடில் வடாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 16 கால் மண்டபத்தின் அருகே சாலை சேதமடைந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள், பெண்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

