/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோணசமுத்திரத்தில் குளம் சீரமைக்க கோரிக்கை
/
கோணசமுத்திரத்தில் குளம் சீரமைக்க கோரிக்கை
ADDED : நவ 26, 2025 04:55 AM
பள்ளிப்பட்டு: நீர் வளத்திற்கு ஆதாரமான குளம் பராமரிப்பு இன்றி சீரழிந்து வருகிறது. குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், கோணசமுத்திரம் கிராமத்தில் பொதுக்குளம் உள்ளது. கிராமத்தை ஒட்டி அமைந்துள்ள குளத்திற்கு மலையில் இருந்து நீர் வரத்து உள்ளது. குளத்திற்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால், குளம் நிரம்பி வழிகிறது. குளத்தில் இருந்து வெளியேறும் நீர், அருகில் உள்ள மழைநீர் கால்வாயில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த குளத்தின் நீர் வளத்தால் கிராம மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
ஆனால், குளமும், குளக்கரையும் தொடர் பராமரிப்பு இல்லாததால் சீரழிந்து உள்ளது.
இதனால் குளத்து நீரை மக்கள் பயன்படுத்தாத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீர் வளத்தை சிறப்பாக பராமரிக்கும் விதமாக ஒன்றிய நிர்வாகம், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், குளத்தை துார்வாரி படித்துறை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

