/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செடிகள் வளர்ந்துள்ள குளத்தை சீரமைக்க கோரிக்கை
/
செடிகள் வளர்ந்துள்ள குளத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 28, 2025 06:42 AM

திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில் செடிகள் வளர்ந்துள்ள குளத்தை சீரமைக்க வேண்டுமென பிராயம்பத்து பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட பிராயம்பத்து பகுதி எல்லையம்மன் கோவில் அருகே சர்வே எண் 86/4ல் குட்டை உள்ளது.
இந்த குளத்தில் சேகரமாகும் நீரை இப்பகுதி மக்களும் மற்றும் அம்மன் கோவிலுக்கும் பயன்படுத்தி வந்தனர்.
இந்த குளம் போதிய பராமரிப்பில்லாததால் செடிகள் வளர்ந்துள்ளது. இதனால் பகுதி மக்கள் இந்த நீரை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
பலமுறை புகார் அளித்தும் செடிகள் வளர்ந்துள்ள குளத்தை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் திருமழிசை பகுதி யில் ஆய்வு செய்து செடிகள் வளர்ந்துள்ள குட்டையை சீரமைத்து கரைகள் அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

