ADDED : ஜூலை 07, 2025 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு, கோவில் குளத்தை துார்வாரி. படித்துறை அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிப்பட்டு ஒன்றியம், குமாரமங்கலம் கிராமத்தில் கோலாத்தம்மன் கோவில் அருகே உள்ள ஆலங்குளம், துார்வாரப்படாமல் சீரழிந்துள்ளது.
கடந்த 2022ல் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், இக்குளம் துார்வாரப்பட்டுள்ளது. ஆனால், குளத்திற்கு படித்துறை மற்றும் சுற்றுச்சுவர் இல்லாததால் மீண்டும் மீண்டும் துார்ந்து வருகிறது.
எனவே, கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன், ஆலங்குளத்தை துார்வார வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

