/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையின் மைய தடுப்பை மாற்றி அமைக்க கோரிக்கை
/
சாலையின் மைய தடுப்பை மாற்றி அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 20, 2025 10:39 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் அமைந்துள்ள ஜி.என்.டி., சாலை மைய தடுப்பை மாற்றி அமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், 3 கி.மீ., நீளத்திற்கு பஜார் பகுதி அமைந்துள்ளது. இச்சாலையில், 20 ஆண்டுகளுக்கு முன், 3 அடி உயர மைய தடுப்பு அமைக்கப்பட்டது.
அப்போது, சாலையின் மொத்த அகலத்தை கணக்கிடாமல், பயன்பாட்டில் உள்ள சாலையின் நடுவே மைய தடுப்பு அமைக்கப்பட்டது.
அதன்பின், ஜி.என்.டி., சாலையின் இருபுறமும் எல்லை நிர்ணயித்து, கால்வாய் அமைக்கப்பட்டது. தற்போது மைய தடுப்பில் இருந்து, ஒருபக்க கால்வாய், 30 - 40 அடி துாரத்திலும், மறுபுறம் உள்ள கால்வாய், 60 - 100 அடி துாரத்திலும் உள்ளது.
இதனால், 40 அடி அகலம் உள்ள சாலையில் ஆக்கிரமிப்பு கடைகள் போக, மீதமுள்ள சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன.
காலை மற்றும் மாலை நேரங்களில், இச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.
மாநில நெடுஞ்சாலை துறையினர், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையோரம், இருபுறம் உள்ள கால்வாய்களின் மையப்பகுதியை கணக்கிட்டு, சாலை மைய தடுப்பை மாற்றி அமைக்க வேண்டும்.
அவ்வாறு அமைத்தால், கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.