தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அகற்றப்பட்ட நிழற்குடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

அகற்றப்பட்ட நிழற்குடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை

அகற்றப்பட்ட நிழற்குடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை


UPDATED : அக் 21, 2026 08:40 PM

ADDED : அக் 21, 2026 08:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 21, 2026 08:40 PM ADDED : அக் 21, 2026 08:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவாலங்காடு: திருவாலங்காடு --–--- அரக்கோணம் நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்ட ஏழு நிழற்குடைகளுக்கு பதிலாக, புதிதாக அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாலங்காடு -–--- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, 2023ம் ஆண்டு நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

அப்போது சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக திருவாலங்காடு, வீரராகவபுரம், வியாசபுரம், புண்டரீகபுரம் வரை இருந்த ஏழு பயணியர் நிழற்குடைகள் அகற்றப்பட்டன.

ஆனால், பணிகள் முடிந்து வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், மீண்டும் பயணியர் நிழற்குடைகள் அமைக்கவில்லை.

இதனால், மழை, வெயில் காலங்களில், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். வீரக்கோவில் வீரராகவபுரம் பகுதியில் சாலையோரங்களிலும், மீடியன்களிலும் பேருந்துக்காக காத்திருக்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து அகற்றப்பட்ட கிராமங்களில் மீண்டும் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us