தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ நிறுத்திய இரு ரயில் சேவை: மீண்டும் இயக்க கோரிக்கை

 நிறுத்திய இரு ரயில் சேவை: மீண்டும் இயக்க கோரிக்கை

 நிறுத்திய இரு ரயில் சேவை: மீண்டும் இயக்க கோரிக்கை


ADDED : ஏப் 27, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே, முதல் மற்றும் கடைசி நேர புறநகர் மின்சார ரயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில்களின் முனையமாக உள்ளது. சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி இடையே, தினமும் 40க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், அதிகாலை 2:45 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும், நள்ளிரவு 12:15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கும் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.

இதனால், கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதை சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் இரவு நேர பணிக்கு சென்று வரும் தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் பயனடைந்து வந்தனர். கொரோனா பரவல் காரணமாக, மேற்கண்ட ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின், இந்த இரு ரயில்களின் சேவை இயக்கப்படாமல் உள்ளது.

எனவே, இரு ரயில்களின் சேவையை மீண்டும் இயக்க ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us