/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆதிகேசவர் கோவிலை சீரமைக்க கோரிக்கை
/
ஆதிகேசவர் கோவிலை சீரமைக்க கோரிக்கை
ADDED : பிப் 16, 2025 03:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலையில் கொசஸ்தலை ஆற்றங்கரையின் தென் புறத்தில் அமைந்துள்ளது ஆதிகேசவ பெருமாள் கோவில். இந்த கோவில், 1,300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவ பெருமாளுக்கு இந்த கோவிலில் பிரம்மோற்சவம் அன்று அபிஷேகம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பல்வேறு சிரப்புகளை உடைய இக் கோவில் 200 ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த கோவிலை சீரமைக்க ஊர் மக்கள் திருப்பணி கமிட்டி அமைத்து சீரமைக்க திட்டமிட்டும் பலன் அளிக்கவில்லை.
எனவே, அறநிலையத் துறையினர, ஆதிகேசவ பெருமாள் கோவிலை மீட்டு சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

