/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விசேஷ நாட்களில் திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
/
விசேஷ நாட்களில் திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
விசேஷ நாட்களில் திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
விசேஷ நாட்களில் திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை
ADDED : ஜன 17, 2025 09:57 PM
திருவள்ளூர்:தை பூசம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என, காங்., எம்.பி., மனு அளித்துள்ளார்.
திருவள்ளூர் லோக்சபா தொகுதி காங்., எம்.பி., சசிகாந்த் செந்தில் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளரிடம் அளித்துள்ள மனு:
திருத்தணி முருகன் கோவில் ஆறுபடைகளில் ஒன்று. இந்த கோவிலில், ஆண்டு தோறும் தை பூசம், ஆடி கிருத்திகை, புத்தாண்டு தினத்தில் படி பூஜை உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசேஷ தினங்களில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் திருத்தணிக்கு ரயிலில் வந்து செல்கின்றனர்.
இந்த விசேஷ தினங்களில் தற்போது அரக்கோணத்தில் இருந்து 15 கி.மீட்டர் துாரத்தில் உள்ள திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களுக்கு எவ்வித பயனும் இல்லை. எனவே, விசேஷ நாட்களில், ஆவடி, திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.