ADDED : மார் 09, 2026 06:10 AM
திருவள்ளூர்: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்துள்ள விவசாயிகள், நாளைக்குள் கரும்பை அனுப்பி வைக்க வேண்டும் என, கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவாலங்காடில் செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025 - -26ம் ஆண்டிற்கான கரும்பு அரவை பணிகள், கடந்தாண்டு அக்., 27ம் தேதி துவங்கி, நிர்ணயிக்கப்பட்ட கரும்பு அரவை இலக்கான 2 லட்சம் டன்களில், கடந்த 2ம் தேதி வரை, 1.86 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள கரும்பு முழுவதையும், நாளைக்குள் அரவை செய்து, கரும்பு அரவை பணிகளை நிறைவு செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
எனவே, 2025- - 26ம் ஆண்டு அரவை பருவத்தில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்து, தற்போது கரும்பு அறுவடை செய்து கொண்டிருக்கும் விவசாயிகள் மற்றும் கரும்பு வெட்டு உத்தரவு பெற்று, நாளைக்குள் கரும்பை ஆலைக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
