/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உணவகம் அமைக்க கோரிக்கை
/
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உணவகம் அமைக்க கோரிக்கை
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உணவகம் அமைக்க கோரிக்கை
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உணவகம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 15, 2025 09:18 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உணவகம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனை, ஜே.என்.சாலையில் இயங்கி வருகிறது.
இங்கு, தினமும் பல்வேறு சிகிச்சைக்காக, 3,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர்.
மேலும், 650 பேர் வரை, உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மகப்பேறு, குழந்தைகள் நல பிரிவுகளில், தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி, பிரசவம் மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன், தினமும் 30 முதல் 40 அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன.
இதற்காக, நோயாளிகளுக்கு உதவியாக, அவரது உறவினர்களும் மருத்துவமனையில் தங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில், புதிய மருத்துவமனை வளாகம் கட்டும் பணிக்காக, கடந்த 6 ஆண்டுக்கு முன், அங்கிருந்த அம்மா உணவகம் இடித்து அகற்றப்பட்டது.
அதன் பின், இதுவரை மருத்துவமனை வளாகத்தில் உணவகம் எதுவும் இல்லை. இங்கிருந்த ஆவின் பாலகமும், கடந்தாண்டு முதல் செயல்படாமல் உள்ளது.
இதனால், நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் உணவருந்த, சாலையைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது.
வயதானோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் சாலையைக் கடக்கும் போது, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் அல்லது உணவகம் வசதியும், ஆவின் பாலகமும் திறக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.