sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 சென்னை - போடி விரைவு ரயில் திருவள்ளூரில் நிறுத்த கோரிக்கை

/

 சென்னை - போடி விரைவு ரயில் திருவள்ளூரில் நிறுத்த கோரிக்கை

 சென்னை - போடி விரைவு ரயில் திருவள்ளூரில் நிறுத்த கோரிக்கை

 சென்னை - போடி விரைவு ரயில் திருவள்ளூரில் நிறுத்த கோரிக்கை


ADDED : பிப் 12, 2026 05:49 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரை வழியாக போடி வரை இயக்கப்படும் ரயிலை, திருவள்ளூரில் நின்று செல்ல ரயில்வே நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட ரயில் பயணியர் சங்கத்தினர், தெற்கு ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னை சென்ட்ரலில் இருந்து, எண் - 20601 என்ற ரயில் காட்பாடி, சேலம், நாமக்கல், கரூர், மதுரை வழியாக போடி வரை இயக்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர், பணி நிமித்தமாக குடிபெயர்ந்துள்ளனர்.

அவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகள் மூலமே செல்ல வேண்டியுள்ளது.

தற்போது, தேனி, போடி வரை இயக்கப்பட்டு வரும் விரைவு ரயிலை, திருவள்ளூரில் நிறுத்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம், தேனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஊருக்கு ரயில் மூலம் செல்ல வசதியாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us