ADDED : மார் 17, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி, திருவள்ளூர் சாலை ஓரத்தில் கட்டப்பட்ட கழிவுநீர் கால் வாயில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கியும், சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நேற்று காலை, சாலையில் திரிந்த பசுமாடு ஒன்று தீனிக்காக அப்பகுதியில் சென்றபோது, திடீரென கால்வாயில் விழுந்தது. வலி தாங்க முடியாத நிலையில் சத்தம் போட்டதை கேட்ட அவ்வழியே சென்றவர்கள், கால்வாயில் விழுந்த மாட்டை மீட்க போராடினர்.
ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் கால்வாயில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது.

